மாசற்ற தீபாவளி : மாணவியர் பேரணி


ஒலி மற்றும் புகை மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வலியுறுத்தி மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன் பேரணியைத் தொடங்கி வைத்தார். பள்ளியைச் சுற்றியுள்ள
சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் பேரணி முடிவுற்றது.
 பட்டாசுகளை கவனமாகவும், விபத்தில்லாமலும் வெடிப்போம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்ப்போம், குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கமாட்டோம் எனப் பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.
 மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.ஜெயலட்சுமி, உதவிப் பொறியாளர் பியூலா, முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் க.முனியாண்டி, ஓ.சி.பி.எம். பள்ளித் தலைமை ஆசிரியை சி.உதயகுமாரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...