நியூட்ரினோ ஆராய்ச்சி மைய பணியில் 100 விஞ்ஞானிகள்


""தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமையும், நியூட்ரினோ' கதிர்கள் பற்றி ஆராய்ச்சி பணியில்,100 விஞ்ஞானிகள் ஈடுப்படுவதாக,'' இந்திய நியூட்ரினோ விஞ்ஞானி சத்ய நாராயணா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை.,யில்

நடந்த "நியூட்ரினோ' பற்றிய கருத்தரங்கில், அவர் பேசியதாவது: நியூட்ரினோ என்பது சூரியனின் கதிர்களிலிருந்து வெளிவரும், மிக நுண்ணிய எலக்ட்ரானை விட சிறிய அணுவாகும். இதை கண்டறிந்து, அதன் எடை, பயன்கள் பற்றி ஆராய்வதற்காக, இந்திய நியூட்ரினோ அப்செர்வேட்டரி என்ற நிறுவனம்,இந்திய அணு சக்தி கழகம், இந்திய அறிவியல் தொழில் நுட்ப கழகத்துடன் இணைந்து, தேனி மாவட்டம் போடி பொட்டிப்புரத்தில் மலையை குடைந்து, நியூட்ரான் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில் சூரியனிலிருந்து வெளி வரும் நியூட்ரான் கதிர்களை சேகரித்து, ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது. இதற்கான பணியை, மும்பை டாடா ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, 26 ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 100 விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். உலகளவில், பல்வேறு நாடுகள் எதிர்பார்க்கும் இந்த ஆராய்ச்சிக்காக மத்தியரசு , 1350 கோடி ரூபாயை, 12வது திட்ட குழுவில் சிபாரிசு செய்துள்ளது ,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...