அரசு பள்ளிகள் புள்ளி விவரம் : தலைமை ஆசிரியர்கள் கைவிரிப்பு

அரசு பள்ளிகளின் புள்ளி விவரங்களை, தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் சேகரிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும், அரசு பள்ளி துவங்கியது முதல், பல்வேறு முயற்சிகளால் மேல்நிலைப்பள்ளி வரை தரம்
உயர்கின்றன. இதுபோன்ற பள்ளிகளில் வெவ்வேறு கால கட்டங்களில் பல தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்த போதிலும், தங்களது பள்ளிகளை பற்றிய பழைய தகவல்களை தெரிந்து கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு கல்வித்துறை அலுவலகங்களில் உள்ளது. அரசு கேட்கும் தகவலுக்காக, குறிப்பிட்ட அரசு பள்ளி புள்ளி விவரங்களை அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டால் தெரியாது என்ற பதிலே பலரிடம் கிடைக்கிறது. இதை தவிர்க்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பணியேற்றது முதல் ஓய்வு பெறும் வரை தங்களது அரசு பள்ளி பற்றிய முழு விவரங்களை சேகரித்து, பைல் போட்டு வைத்திருக்கவும், அதிகாரிகள் கேட்கும்போது, தெரியாது என, பதில் தரக்கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...