வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள்- அதிகாரிகள் வியாழக்கிழமை (டிசம்பர் 20) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஸ்டேட் வங்கி: நாடு முழுவதும் சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள்-50 ஆயிரம் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில்
35,000 பேர் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, கனரா வங்கி உள்பட தேசிய வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள்-அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் அவை செயல்படாது. எனினும் வேலைநிறுத்தத்துக்கு தார்மிக ஆதரவைத் தெரிவித்துள்ள போதிலும் பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்துக் கிளைகளும் வியாழக்கிழமை (டிசம்பர் 20) செயல்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வேலைநிறுத்தம் ஏன்? ""வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வடிவிலான மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தில் தனியார் வங்கிகளுக்கு அதிக அதிகாரம் தரப்பட்டு தனியார் வங்கிகளின் முதலாளித்துவம் ஊக்குவிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால்தான் புதிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
மேலும் புதிய சட்டத் திருத்தத்தில் தனியார் வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிக உரிமைகள் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் 26 தனியார் வங்கிகள் உள்ளன. அவற்றின் முதலீடு ரூ.4,800 கோடி. அந்த வங்கிகளில் ரூ.11 லட்சம் கோடி மக்கள் பணம் உள்ளது. தனியார் வங்கிகளுக்கு தற்போது உள்ள விதிகளைத் தளர்த்துவதன் மூலம் மக்கள் பணத்தை அவர்களின் தனிப்பட்ட ஆளுமைக்குப் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் தனியார் வங்கிகள் அதிக லாப நோக்கத்துடன் செயல்பட்டு, வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைக்கவும், கடன்களுக்கான வட்டியை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவார்கள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும். இதேபோன்று பெரிய தொழில் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது'' என்று சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...