ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இரட்டைபட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி
இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று (21.12.2012) இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் TET விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...