கல்வி விளையாட்டு விழா

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
÷ஊராட்சித் தலைவர் வி.செல்வம் தலைமை
தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் கே.குணசேகரன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.இளங்கோவன் போட்டியை துவக்கி வைத்தார்.÷ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்ற டி.அத்திப்பாக்கம், குடமுரட்டி, சித்தாத்தூர் உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ச.முத்தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.
செஞ்சி: வல்லம் ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா புதன் கிழமை நடைபெற்றது.÷இதில் கடம்பூர், விற்பட்டு,பெரும்புகை மற்றும் சேர்விளாகம் பள்ளிகளின் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
÷விழாவில் ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், உருளைக்கிழங்கு சேகரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.÷விளையாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், குமார், நடராஜன், சித்ரா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் சசிரேகா மாற்றுத்திறனுடையோரின் வழிகாட்டி ஆசிரியர் வளர்மதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...