பஸ் ஸ்டாண்டில் மூன்று நாள் போலியோ சொட்டு மருந்து : அரசு புது உத்தரவு


போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில், இந்த முறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கும், முதல் கட்ட பணி, ஜன., 20லும், இரண்டாவது கட்டமாக, பிப்., 24லும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகங்கள்
மற்றும் சுகாதாரத்துறையினர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிக கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அங்கன்வாடி, நகர்நல மையம், கல்வி நிறுவன வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு நாள் மட்டுமே வழக்கமாக முகாம் நடக்கும்; விட்டுபோன குழந்தைகளுக்கு, ஒரு சில இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இம்முறை, மக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட்களில் மட்டும், வழக்கத்தை விட, கூடுதலாக மூன்று நாட்கள், போலியோ சொட்டு மருந்து வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...