பி.எஸ்.எல்.வி.,"சி-20' ராக்கெட் விண்ணில் பாய்கிறது

ஏழு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி.,"சி-20' ராக்கெட், இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில்,"சரல்' என்ற புதிய செயற்கைக் கோளை, "இஸ்ரோ' நிறுவனம் தயாரித்துள்ளது.
கடல் வானிலை, கடல், பூவி அமைப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றை ஆய்வு செய்து, துல்லியமான புள்ளி விவரங்களை இது அளிக்கும். கடல் குறித்த ஆய்வுக்கு உதவும் , சரல் செயற்கைக்கோளுடன், ஆஸ்திரியா,

கனடா நாடுகளின், தலா, இரு செயற்கைக் கோள்; டென்மார்க், இங்கிலாந்து நாடுகளின், தலா, ஒரு செயற்கைக்கோள் என, மொத்தம் ஆறு சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை, 5:56 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., சி - 20 ராக்கெட் மூலம், ஏழு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதற்கான, 59 மணி நேர, "கவுன்ட் டவுன்' 23ம் தேதி, காலை, 6:56 மணிக்கு துவங்கியது. கவுன்ட் டவுன் துவங்கியதும், ராக்கெட்டை விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்துவது தொடர்பான முதல் கட்ட சோதனைகளை, விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது.
குறிப்பாக, ராக்கெட்டை முன்னோக்கி செல்ல உதவும் கருவி, மற்றுமுள்ள உபகரணங்களையும் ஆய்வு செய்தனர். முதல் கட்ட சோதனைகள் திருப்திகரமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, ஏழு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி.,சி-20 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்ரோ தலைவர், கே.ராதாகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர். புதிதாக செயற்கை கோளை ஏவும் முன், திருப்பதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார். இதேபோல், நேற்றும், அவர், திருப்பதிக்கு வந்து, தன் மனைவி பத்மினியுடன், சாமி தரிசனம் செய்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...