மின்சாரத்தை சேமியுங்கள் பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

காஜியாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாள் அறிவியல் பொருட்காட்சியை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பள்ளி மாணவிகள் மத்தியில் பேசிய அவர், மின்சார சிக்கனத்தின் அவசியத்தை இன்றைய
மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இங்குள்ள ஹர்சா போலீஸ் லைனில் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இதன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொருட்காட்சியை தொடங்கிவைத்தார்.இதில் அவர் பேசியதாவது:இன்றைய சூழலில் மின்சாரத்தின் அவசியம், சிக்கனம் பற்றி ஒவ்வொரு மாணவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாமல் எந்த ஆய்வையும் கண்டுபிடிப்பையும் நிகழ்த்த முடியாது.

மின்சாரம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆயுதம். அதை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். அதை சேமிப்பதன் மூலமே எதிர்காலத்திலும் அதை பயன்படுத்த முடியும். முக்கியமான பல திட்டங்களை செயல்படுத்த முடியும்.மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.பின்னர் பொருட்காட்சியை சுற்றிப்பார்த்த கலாம், அறிவியல் மீது அதிக ஆர்வம் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் காஜியாபாத் மாவட்ட நிர்வாக துணை தலைவர் சந்தோஷ் யாதவ், சீனியர் எஸ்.பி. பிரசாந்த் குமார், துணை மாஜிஸ்திரேட் அமித் சிங் மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...