வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப்
புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்' சீருடை
ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வரும், 2013-14ம் கல்வி ஆண்டு, ஜூன் 3ம் தேதி துவங்குகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாளே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்' சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அனுப்பும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.
இது குறித்து, பள்ளிக் கல்வி வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: பள்ளி திறந்த முதல் நாளே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவர்களுக்கு, புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும். மாணவர்களுக்கு, ஆண்டுக்கு நான்கு ஜோடி, இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதில், முதல்கட்டமாக, ஒரு ஜோடி சீருடை மட்டும், பள்ளி திறந்த நாளன்றே வழங்கப்படும். மீதியுள்ள மூன்று செட் சீருடைகள், படிப்படியாக, விரைந்து வழங்கப்படும். இவ்வாறு, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பணிகளை, சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள் ஆகியோருக்கு, பாடநூல் கழகம் சார்பில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது.
புதிய திட்டங்கள்: இலவச சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்ட சில திட்டங்கள், ஏற்கனவே அமலில் இருந்து வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில், இலவச கலர் பென்சில், "க்ரேயான்' பென்சில்கள், ஜியாமெட்ரி பாக்ஸ், அட்லஸ், காலணி, புத்தகப் பை ஆகிய திட்டங்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், கூடுதலாக, இரண்டு, செட் சீருடைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த திட்டங்களை, கடந்த கல்வி ஆண்டில் நிறைவேற்றுவதில், சிரமம் இருந்தது. "டெண்டர்' உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருந்ததால், பொருட்களை வழங்குவதில், கால தாமதம் ஏற்பட்டது. ஆனால், வரும் கல்வி ஆண்டில், இது போன்ற தாமதங்கள் ஏற்படாது என்றும், அனைத்து இலவச பொருட்களும், ஒருசில மாதங்களில், முழுவதுமாக வழங்கி முடிக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.