:எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
மே, 5ம் தேதி முதல் வழங்கப்படுகிறன. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக்
கல்லூரிகளிலும், சேர்க்கை விண்ணப்பங்கள், மே, 20ம் தேதி வரை,
வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; ஜூன் 20ம் தேதிக்கு முன், மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,145 இடங்கள் உள்ளன. இதில், 1,823 இடங்கள் மட்டும், தமிழக மாணவ, மாணவியரைக் கொண்டு நிரப்பப்படும். மீதமுள்ள இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். திருவண்ணாமலையில், இந்த ஆண்டு, புதிய மருத்துவக் கல்லூரி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் இடங்களுக்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, 250 இடங்கள் வரை, கடைசி நேரத்தில், கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.