ஆசிரியர்தகுதித் தேர்வு படிக்க ஒரு வெற்றிகரமான 90 பக்க தொகுப்பு SPECIAL....ஆசிரியர்களுக்கான SSTA வில் -TNTET STUDY MATERIAL

உடல் வளர்ச்சி
* உடல் வளர்ச்சி, மனித வளர்ச்சியின் ஒர் அடிப்படைக் கூறாக உள்ளது. உடல் வளரச்சி என்பது மனித உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை 
CLICK HERE TO DOWNLOAD 

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள்
குறிப்பதாகும்.

* உடல் வளர்ச்சி - குழந்தையின் பிற எல்லாக் கூறுகளுக்கும் ஆதாரமாகவும், அவற்றை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது.

* மனித உடலின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை 8 வருவங்களாகப் பிரிக்கலாம். அவை:

* சிசுப் பருவம் - 0 முதல் 1 ஆண்டுகள்

* குறுநடைப் பருவம் - 1 முதல் 3 ஆண்டுகள்

* பள்ளி முன் பருவம் - 3 முதல் 6 ஆண்டுகள்

* பள்ளிப் பருவம் - 6 முதல் 10 ஆண்டுகள்

* குமரப் பருவம் - 10 முதல் 20 ஆண்டுகள்

* வாலிபப் பருவம் - 20 முதல் 40 ஆண்டுகள்

* வாலிபப் பருவத்திற்கும் முதுமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம் - 40 முதல் 60 ஆண்டுகள்

* முதுமைப் பருவம் - 60 ஆண்டுகளுக்கு மேல்

* 3 முதல் 6 ஆண்டுகளில் குழந்தைகள் முன் மழலையர் பள்ளியிலும் 6 முதல் 10 ஆண்டுகளில் தொடக்கப் பள்ளியிலும் கல்வி பயிலுகின்றனர்.

* பிறந்த குழந்தை சராசரியாக 50 செமீ உயரமும் 3கிகி எடையும் கொண்டதாக உள்ளது. நாளடைவில் குழந்தை உயரத்திலும் எடையிலும் வளர்ச்சியடைகிறது.

* உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வருகிறது. பின்னர் உடலின் மைய அச்சிலிருந்து இரு ஒரங்களையும் நோக்கி வருகிறது.

* உடல் வளர்ச்சியில் எலும்புகளின் வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் முக்கிய காரணிகளாகும்.

* குழந்தை முதலாண்டு முடிவில் 75 செமீ உயரமும், 6 கிகி எடையும் கொண்டதாக இருக்கும்.

* வளர்ச்சியானது குழந்தைகள் பெற்றுள்ள மரபுப் பண்பு மற்றும் சூழ்நிலையின் தாக்கத்தை பொறுத்து மாறுபடுகிறது.

* பள்ளிப்பருவம் முதல் குமரப் பருவம் தொடங்கும் வரை குழந்தையின் உடல் வளர்ச்சி தேக்க நிலையை அடைகின்றது. அதனைத் தொடர்ந்து குமரப்பருவத்தில் உடல் வளர்ச்சியில் அதிக வேகம் காணப்படுகிறது.

* குழந்தை பிறப்பதற்கு முன்பே குழந்தையின் மூளை முழு அமைப்பைப் பெற்று விடுகிறது. 4 முதல் 6 வயதுக்குள் மூளையின் எடை, வளர்ந்த மனித மூளையின் எடையில் 80 சதவீதத்தை எட்டுகிறது. 8 வயதிற்குள் 93 சதவீதமாக மாற்றமடைகிறது.

* உடலின் அனைத்து பாகங்கலும் ஒரே வீதத்தில் வளர்ச்சி அடையாமல், வெவ்வேறு வீதத்தில் வளர்ச்சி அடைகின்றன.

* குழந்தையின் நரம்பு மண்டலம் மிக வேகமாகவும், உடல் உறுப்புகள் மெதுவாகவும் வளர்ச்சி அடைகின்றன.

* உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பொருத்தவரை குழந்தை பள்ளிக்கு வரும் வரை உடல் உறுப்புக்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து 40 சதவீத வளர்ச்சி நிறைவு பெற்றுவிடுகிறது..

* தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும்போது குழந்தையின் நரம்பு மண்டலம் 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது.

* தனி மனித உடலின் கட்டமைப்பும், சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவனது வளர்ச்சியைப் பாதிக்கும் அடிப்படைக் காரணிகளாகும்.

உடல் வளர்ச்சியில் நாளமில்லாச் சுரப்பிகள்:

* நாளமில்லாச் சுரப்பிகள் மனித உடலில் பல்வேறு இடங்கலில் அமைந்து ஹார்மோன்களைச் சுரப்பதன் மூலம் உடல் வளர்ச்சியில் நரம்பு மண்டலத்துடன் துணை நிற்கின்றன.

* பிட்யூட்டரியின் முன்பகுதியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன் எலும்பு மற்றும் தசை திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதியில் சுரக்கும் பிற ஹார்மோன்கள் மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

* அட்ரினல் சுரப்பிகள் இரு டிறுநீரகங்களின் மேல் பதிந்திருக்கின்றன. இதன் உட்பகுதி(மெடுல்லா) அட்ரினலின் எனும் ஹார்மோனைச் சுரப்பதன் மூலம் அவசர காலங்களைச் சமாளிக்க உதவுகிறது.

* அட்ரினலின் இதயத்தின் செயல்பாட்டையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதன், இரத்தக் குழாய்களும், தசைகளும் சுருங்கி விரிவடைய உதவுகிறது.

* அட்ரினலின் கார்போ ஹைட்ரேட், புரதம் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.

* தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராக்சின் ஆக்சிஜன் உட்கிரகித்தலை அதிகப்பதுத்துவதுடன் வளர்சிதை மாற்றச் செயலைக் கட்டுப்படுத்துகிறது.

* தைராய்டு ஹார்மோன் எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் தூண்டுகிறது. இது வளர்ச்சியின் விகிதத்தைக் கட்டுப்படுதுறது.

* பாரா தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.

* கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கார்போஹைட்ரே, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்திற்கும் குளுக்கோஸ் உட்கிரகிக்கும் அளவைக் கட்டுப்படுத் புரதம் உருவாவதற்கும் கொழுப்பு சேகரிக்கவும் பயன்படுகிறது.

* குழந்தைப் பருவத்தில் பிட்யூட்டரியில் சுரக்கும் வளர்ச்சி ஹார்மேன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பின், சாதாரண உடல் பருமன் உண்டாகிறது.

* வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுர்ப்பின் குள்ளத்தன்மை ஏற்படுகிறது.

* குழந்தைகளிடம் தைராக்சின் குறைவாக சுரப்பின் கிரிட்டினிசம் நோயும், அதிகமாகச் சுரப்பின் முன்கழுத்துக் கழலை நோயும் ஏற்படுகிறது.

நரம்பு செல்லின் வளர்ச்சி

* புலனுறுப்புக்களின் எல்லாத் திறன்களும் வளர்ச்சி பெற்ற நரம்பு மண்டலத்தையே பொறுத்ததாகும்.

* நரம்பு மண்டலம், மூளை, தண்டுவடம் ஆகியவற்றைக் கொண்ட மையநரம்பு மண்டலம், இவற்றிற்கு வெளியில் உள்ள நரம்பு திசுக்களைக் கொண்ட வெளி நரம்பு மண்டலம் ஆகும். நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நரம்பு செல் அல்லது நியூரான் எனப்படும்.

* நியூரான்களின் செயல்பாட்டினைப் பொறுத்து அவற்றை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

* 1.புலுனுணர்ச்சி நியூரான்- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் புலன்களில் அமைந்து வெளியுலகத்திலிருந்து புலன் உறுப்புகளின் வாயிலாக மைய நரம்பு மண்டலத்திற்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் நியூரான்கள் புலனுணர்ச்சி நியூரான்கள் என்பபடும்.

* 2.இயக்க நியூரான் - மைய மரம்பு மண்டலத்தி்லிருந்து தசைகளுக்குக் கட்டளைகளைக் கொண்டு செல்லும் நியூரான்கள் இயக்க நியூரான்கள் எனப்படும்.

* 3.இணைப்பு நியூரான் - புலனுணர்ச்சி நியூரான்களையும், இயக்க நியூரான்களையும் இணைப்பது இணைப்பு நியூரான்கள் என்ப்படும்.

* மைய நரம்பு மண்டலத்திலுள்ள 99.98 சதவீத நியூரான்கள் இணைப்பு நியூரான்களாகும்.

* தூண்டல்களைப் பெறும் நியூரானின் பாகம் டென்டிரைட் என்ப்படும்.

* நியூரானின் உடல் பகுதிக்கு சோமா என்று பெயர். இதனுள் உட்கருவும், சைட்டோபிளாஸமும் உள்ளன.

* சோமா டென்டிரைட்களிலிருந்து பெற்ற செய்தியை ஒருங்கிணைத்து அதனை ஒரு தணித்த நீட்சியான இழைக்குக் கடத்துகின்றது. இந்த நீட்சியான இழைக்கு ஆக்ஸான் என்று பெயர். இந்த ஆக்ஸான் எவ்வளவு நீளத்திற்கு நீண்டுள்ளதோ அந்த நீளத்திற்கு செய்திகளைக் கடத்துகின்றது.

* ஆக்ஸானைச் சுற்றிலும் மையலின்ஷீத் ஒரு போர்வை போல மூடியுள்ளது. இது புரதம் மற்றும் கொழுப்பால் ஆனது. இது நரம்பு துடிப்புகளின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு உதவுகின்றது.

* பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையன் ஷீத் படலம் இருப்பதில்லை.

* மையன் ஷீத் படலம் குழந்தை வளர வளர உருவாகின்றது.. இந்நிகழ்ச்சிக்கு மையனேஷன் என்று பெயர்.

* புலன் உணர்ச்சி நரம்புகளும், இயக்க நரம்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கின்றன. இதன் விளைவாக அம்மா என்னும் சொல்லை குழந்தை திருத்தமாகவும், எளிதாகவும் கூறுகிறது.. இதனை உடலியக்கச் செயல்பாடு என்கிறோம். இதற்கு அறக்குறைய ஒர் ஆண்டு காலம் ஆகின்றது.

* நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியோடு இணைந்து நடைபெறும் குழந்தையின் உடல் வளர்ச்சியானது குழந்தையின் உற்று நோக்கல், தொடர்புபடுத்துதல், சிந்தித்தல் போன்ற மனச் செயல்பாடுகலின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகிறது.

* சியோபெர்னியா என்னும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய் மரபு வழி நோயாகும். பெற்றோர் இருவருக்கும் இந்நோய் இருப்பின் குழந்தையையும் இந்நோய் தாக்குகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...