இங்கிலாந்தில் மேற்படிப்பு, ஆய்வுகளை மேற்கொள்ள, தமிழக அரசு கல்லூரிகளில் இருந்து, 26 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
அரசு கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்
படிக்கும் வகையில், பிரிட்டிஷ் கவுன்சிலுடன், அரசு, ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்ப, இங்கிலாந்து நாட்டில் உள்ள, எட்ஜ்ஹில் பல்கலைக்கழகம், பர்மிங்காம் பல்கலைக்கழகம், நாட்டிங்காம் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், ராயல் ஹாலோவே கல்லூரி மற்றும் கிங்ஸ் கல்லூரி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
முதுகலை முதலாண்டு மாணவர்கள், மூன்றாம் பருவத்தை வெளிநாட்டு பல்கலைகளில் படிக்கும் வகையில், தமிழகத்தில், 26 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை ராணிமேரி, பாரதி, காயிதே மில்லத், அம்பேத்கர், மாநில கல்லூரிகளிலிருந்து, எட்டு மாணவ, மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர்.
கோவை, உடுமலை, கும்பகோணம், சேலம் அரசு கல்லூரி, தஞ்சாவூர் கே.என்.அரசு கல்லூரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கல்லூரி, வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரி, திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு கல்லூரியில் இருந்து, 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பத்தாண்டுகள் ஆசிரியராக இருந்தோர், ஆராய்ச்சி அனுபவம் பெற்ற, ஐந்து ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆராய்ச்சி மேற்கொள்ள, மாணவர்களோடு, வெளிநாட்டு பல்கலைக்கு செல்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தலா, 15 லட்சம் ரூபாயை அரசு செலவு செய்கிறது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர், சிந்தியா பாண்டியன் கூறுகையில், ""செப்டம்பர் இரண்டாம் வாரத்தில், மாணவர்கள் வெளிநாடு செல்ல உள்ளனர். அரசு கல்லூரிகளின் வளர்ச்சிக்கு, இத்திட்டம் மைல் கல்லாக அமையும்,'' என்றார்.