"சித்தாலப்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில், 30
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம், இடிந்து விழும் தறுவாயில் உள்ளதால்,
கோடை விடுமுறையில், அக்கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டித்தர,
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை
விடுத்துள்ளனர். மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்தில்,
1925ல், அரசு துவக்கப்பள்ளி கட்டப்பட்டது. சித்தாலப்பாக்கத்தை ஒட்டிய
மாடம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, பெரும்பாக்கம் உள்ளிட்ட
பகுதிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியர் பயனடைந்தனர். இப்பள்ளி, பல
ஆண்டுகளுக்கு முன், அரசு நடுநிலைப் பள்ளியாகவும், 2008ல், அரசு உயர் நிலைப்
பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. துவக்கப் பள்ளியில், 330 பேரும்,
உயர்நிலைப் பள்ளியில், 450 பேரும் படித்து வந்தனர். உயர்நிலைப் பள்ளிக்கு
சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர் அருகில் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு,
கட்டடம் கட்டப்படாததால், அனைத்து மாணவர்களும், துவக்க பள்ளி வளாகத்திலும்,
திறந்த வெளியிலும் கல்வி கற்று வந்தனர்.
இதுகுறித்து, "தினமலர்' நாளிதழில், படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. இதை அடுத்து, உயர் நிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஒன்பது புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், உயர் நிலைப்பள்ளி அங்கு மாற்றப்பட்டது. தற்போது, பழைய பள்ளி, துவக்கப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், அங்குள்ள பழைய கட்டடம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, வரும் கோடை விடுமுறையில் அந்த கட்டத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: சித்தாலப்பாக்கம் துவக்கப் பள்ளியில், தற்போது, 330 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். துவக்கப் பள்ளியில் முகப்பு கட்டடம் இன்றளவில், ஓட்டு கட்டடமாகவே உள்ளது.
உட்புறத்தில், கான்கிரீட் கட்டடம் ஆங்காங்கே விரிசல் விழுந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற காரணத்தால், கடந்த மூன்று ஆண்டுகளாக, அந்த கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதனால், மீதமுள்ள இடத்தில் இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கின்றனர். ஒரே அறையில் மாணவர்களை அடைப்பதால், அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, வரும் கோடையில் அந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.