டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும்
மொழிப்பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4
தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே, 100
ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்ட அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக, இன்று வெளியாகிறது.அரசுப் பணியில் சேருபவர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில், மாற்றத்தை ஏற்படுத்தினார். இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
இது தொடர்பாக, நடப்பு சட்டசபையில், சில எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, "மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வைகை செல்வன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய பாடத் திட்டங்களில், மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளில், தேர்வாணையம் ஈடுபட்டது.
குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, பழையபடி, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குரூப்-2 தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான, 100 கேள்விகள், முற்றிலும் நீக்கப்பட்டு, பொது அறிவில், 150 கேள்விகளும், திறன் அறிதல் பகுதியில், 50 கேள்விகள் என, உருவாக்கப்பட்டுஇருந்தது. இவை மாற்றப்பட்டு, மொழிப்பாட பிரிவில், மீண்டும், 100 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என, கூறப்படுகிறது.