மாணவ, மாணவியருக்கு பயன்படாத காலணி : அளவு மாறியதால் காட்சி பொருளாகும் பரிதாபம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட, விலையில்லா காலணிகள் அளவு சரியாக இல்லாததால், பலரும் பயன்படுத்த முடியாத
நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் , கடந்த கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை படிக்கும், 81 லட்சத்து, 2,128 பேருக்கு, 94.76 கோடி ரூபாய் மதிப்பில், விலையில்லா காலணி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனியே கால் அளவு எடுக்கப்பட்டு, அதன் அளவுகளை, தேவைப் பட்டியலில் இணைத்து வழங்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், அரசின் திட்டமான காலணி மற்றும் புத்தகப்பை மட்டும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சேலம் ஊரக ஒன்றியத்துக்குட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு காலணி வழங்கப்பட்டுள்ளது. இதில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 9 மற்றும், 12 என்ற இரண்டே அளவுகளில் மட்டுமே, காலணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்த அளவிலான காலணி போதவில்லை.இந்த காலணியை, பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...