சிவகங்கையில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்
மையத்தில், மின்வெட்டு பிரச்னையால் ஆசிரியர்களுக்கு "பிளாஸ்டிக்' விசிறி
வழங்கப்பட்டது. சிவகங்கை,புனித ஜஸ்டின்
மேல்நிலைப்பள்ளியில்,பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்.15 முதல் நடைபெற்று வருகிறது.500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் மையத்தில், அடிப்படை வசதிகள் இன்றி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.மேலும், கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. தினமும் பகல் 12 முதல் மாலை 3.30 மணி வரை மின்வெட்டு உள்ளது. நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, "பிளாஸ்டிக்' விசிறி இலவசமாக வழங்கப்பட்டது.