திறந்த நிலை பல்கலைக்கு புதிதாக மண்டல மையங்கள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, சென்னை, மதுரை, தர்மபுரி ஆகிய இடங்களில், புதிய மண்டல மையங்கள்
அமைக்கப்படுகின்றன.
கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வியை தொடர இயலாதவர்களுக்கு, உயர் கல்வியை வழங்க, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை, துவங்கப்பட்டுள்ளது. இங்கு, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தரமான கல்வி சேவையை வழங்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வி தொடர்பான குறைகளுக்கு உடனடி தீர்வு காணவும் திட்டப்மிடப்பட்டு உள்ளது. இந்த பல்கலைக்கு, சென்னை, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில், மண்டல மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, 65.15 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. இந்த மையங்களில், மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்குதல், வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொண்ட குழு, மைய நடவடிக்கைகளை கண்காணிக்கும்.

இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர், சந்திரகாந்தா கூறியதாவது: ஏற்கனவே, திருச்சி, கோவையில் மண்டல மையங்கள் உள்ளன. தற்போது புதிதாக, சென்னை, மதுரை, தர்மபுரியில் மண்டல மையங்கள் அமைக்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் போன்ற அதிகாரிகளை சந்திந்து, மையத்திற்கான இடத்தை தேர்வு செய்து வருகிறோம். வரும் ஜூலை மாதம் முதல், தற்காலிகமாக மண்டல மையங்கள் செயல்படும். இவ்வாறு, சந்திரகாந்தா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...