பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல்: கமிஷன் முடிவு

தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் மாணவர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திற்கும் தேர்தல் நடத்த, கூட்டுறவு தேர்தல்
கமிஷன் முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், 5 கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து வருகிறது. மே.,
6 க்குள் இச்சங்கங்களில் தேர்வு செய்யப்படும் இயக்குனர்கள், தலைவர்கள் பதவியேற்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள, அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளில் இயங்கி வரும் மாணவர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு, தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கும் அடுத்த கட்டமாக தேர்தலை நடத்த, கூட்டுறவு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களிலும், இயக்குனர், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த, அந்த சங்கங்களின் துணை விதிகள், சங்க ஆவணங்களை சேகரித்து வைக்குமாறு, உத்தரவு வந்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாதவர்களை இயக்குனர், தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.இங்கு மாணவ உறுப்பினர்கள் ஓட்டளிப்பர். கல்லூரி சங்கங்களில் முதல்வர், பேராசிரியர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பெண் மாணவர்களை, இயக்குனர், தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய, கல்லூரி மாணவர் உறுப்பினர்கள் ஓட்டளித்து தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அச்சங்கங்களின் செயல்பாடு குறித்து விபரம் சேகரித்து வருகிறோம். சங்க துணை விதிப்படி, மாணவர்கள் ஓட்டளிக்க வயது வரம்பு இருக்கும். அதன்படி, ஓட்டளிக்கலாம். கூட்டுறவு துணை விதிகள்,தீர்மானங்கள் போன்ற ஆவணங்களை சேகரிப்பதில்,சிக்கல் ஏற்பட்டுள்ளது,என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...