மாவட்ட
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்கள், உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள்
27-ந்தேதி முதல் வினியோகம் செய்யப்படுகின்றன. ஜூன் 16-ந்தேதி வரை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ. 500.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 ரொக்கமாக செலுத்தி பெறலாம்.
இணையதளம் வழியாக ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்ட முதன்மை
கல்வி அலுவலகத்திலோ, அல்லது முதன்மை கல்வி அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்ட
மையத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தையும் தேர்வு செய்யலாம்.
31.7.2013 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதி
திராவிடர், பழங்குடியினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 38
ஆகும். ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு
அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பித்தினை விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே 12.6.2013 அன்று மாலை 5
மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரரின்
குழந்தைகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்பு
இடஒதுக்கீடு உள்ளது. இதற்கான விவரங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள
கையெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.