தமிழுக்கு இடம் இல்லையா?கருணாநிதி கண்டனம்-DINAMALAR

கல்லூரிதேர்வுகளிலும், தமிழுக்கு இடம் இல்லையா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து,
அவரது அறிக்கை:

தமிழ் வழிக்கல்விக்கு முற்றிலும் எதிராக, அ.தி.மு.க., அரசு மேற்கொண்டு வரும், நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும்தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும்; தமிழில் எழுதக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை அடுத்து, கல்லூரிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஒரு சிலர், ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தால்,வேலை வாய்ப்புக்கு அது உதவிகரமாக இருக்கும் என, ஒரு வாதத்தை வைக்கின்றனர்.உலகின் பல்வேறு நாடுகளில், ஆங்கிலம் வழக்கு மொழியாகக் கூட இல்லை. ரஷ்யா, ஜெர்மன், ஜப்பான், சீனாபோன்ற பல நாடுகளில், அந்நாட்டு மொழிகள் தான், ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், விளங்குகின்றன.

எனவே, அ.தி.மு.க., அரசு அனைத்துப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் என, சபையில் அறிவித்து விட்டு, தற்போது தமிழகத்தில், கல்லூரிதேர்வுகளில், தாய்மொழி தமிழுக்கே இடமில்லை; எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கவேண்டும் என, பிடிவாதமான உத்தரவின் மூலம், நிறைவேற்ற நினைப்பது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதைப்போலத் தான் இருக்கிறது. தமிழின மாணவர்களிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தும், அரசின் இந்த முடிவுகள், கடும் கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...