அமைச்சர் வைகைச்செல்வன்
சென்னை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக்
குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
வைகைச்செல்வன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான
விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:
பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக்
கடைப்பிடித்துவருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத
மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதற்காகவும், தரமான
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப்
பின்பற்றுகிறோம்.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில்
இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
CLICK HERE TO DOWNLOAD CALENDER SSTA
-
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...