பள்ளிகளில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய தனி ஹெல்ப்–லைன் வசதி
செய்யப்பட்டு இருப்பதாக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான
விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் ஆர்.சுபா, பாலியல் கொடுமை குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:–
ஹெல்ப்–லைன் வசதி
பள்ளிகளில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. உறுப்பினர் குறிப்பிட்டார். புகார் பெட்டிகள் மட்டுமல்ல பாலியல் கொடுமை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் தனி ஹெல்ப்–லைன் வசதியே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது காவல்துறையினர் மூலம் செயல்படுத்தப்படுகிறது.பள்ளி குழந்தைகள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டால் இந்த ஹெல்ப்–லைனுக்கு குறிப்பிட்ட எண்ணில் எவ்வித கட்டணமும் இன்றி தொடர்புகொண்டு புகார் செய்யலாம். காவல்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
தகுதித்தேர்வு மதிப்பெண்
தொடர்ந்து உறுப்பினர் சுபா பேசுகையில், ‘‘தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்ற அடிப்படையில் உள்ளது. தற்போது ஆரம்ப பள்ளிகளில் செயல்வழி கற்றல் திட்டம் செயல்படுத்தப்படுவதால் 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில், என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு மதிப்பெண் தகுதியை குறைக்க வேண்டும்’’ என்றார்.