வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர்


தமிழகத்தின் 2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர், 41 நாட்கள் நடந்தது. 204 மணி நேரம், 10 நிமிடம், சட்டசபை நடத்துள்ளது. இதில், 110வது விதியில், 43 அறிக்கைகளில்,
பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கக் கோரி, தனி நபர் மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை அரசு ஏற்கும் சட்டம், மாநில சொத்து வரி வாரியம் அமைக்கும் சட்டம் ஆகிய முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

"சஸ்பெண்ட்':நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ஸ்டாலின், புஷ்ப லீலா ஆல்பன், கே.சி.பழனிசாமி ஆகியோரைத் தவிர, 19 பேர், பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகளுக்கு பேச போதிய காலம் ஒதுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆளும் கட்சிக்கு தோழமையாக இருக்கும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் இதே குற்றச்சாட்டை வைக்கின்றன. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போது, அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிட்டு, பதில் அளிக்கின்றனர்.

""பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அளித்தோம். ஆனால், பெயருக்கு சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆலோசனையில் உள்ளன என கூறியே, அவற்றை விவாதத்துக்கு சபாநாயகர் எடுத்துக் கொள்ளவில்லை,'' என, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.

"ஜீரோ' நேரம் இல்லை:மேலும் அவர்கள் கூறியதாவது:கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் சட்டசபை விதி 110ன் கீழ், அறிக்கைகளைப் படிக்கத் துவங்கி விடுவார். முதல்வர் அறிக்கை வாசித்து முடித்ததும், அதற்கு, கட்சி வாரியாக எம்.எல்.ஏ.,க்களும், எந்த துறையில் முதல்வர் அறிக்கை வாசித்தாரோ, அத்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர், முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பர்.

இதற்காக, சபை நேரத்தில், 1:30 மணி நேரம் முதல் 2:00 மணி நேரம் வரை போய்விடும். அதன்பின், துறைகளின் மானியக் கோரிக்கை மீது, விவாதம் துவங்கிவிடும். "ஜீரோ நேரம்' என்பதே, சட்டசøபில் இல்லை. இதனால், முக்கியப் பிரச்னைகள் குறித்து, அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறுகின்றனர்.

புறக்கணிப்பு:பட்ஜெட் கூட்டத் தொடரின், கடைசி இரு நாட்களை, தே.மு.தி.க.,புறக்கணித்தது. அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, நடக்கும் சட்டசபைக்கு வருவதால், என்ன பயன் என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.

தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத குறையைப் போக்க, முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளை, சபையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க.,வின் தோழமை கட்சியான, புதிய தமிழகம் கோரிக்கை விடுத்தது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர்கள், ""தி.மு.க.,வை நாங்கள் வெளியேற்றவில்லை; அவர்களே வெளியேறி விட்டனர்,'' என, கூறினர். பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த, 204 மணி நேரம், 10 நிமிடத்தில், முதல்வர் மற்றும் அரசை வாழ்த்தவே, பெரும்பகுதி நேரம் செலவிடப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ""தி.மு.க., அரசால் ஏற்பட்ட சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, கடந்த இரு ஆண்டுகளாக அரசு செயல்பட்டுள்ளது. அதற்கு, வாழ்த்துகின்றனர். இதை, ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு மனசு வரவில்லை,'' என, ஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...