சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்.,
படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில்
சலுகை அளிக்கப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அரசின் முகமையான அம்பேத்கர் பல்கலைக்கழகம் மூலம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்தப் படிப்பு சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிற காரணத்தால், ஒற்றைச் சாளர கலந்தாய்வின் முறையில் நடைபெறவில்லை என்பதாலும் இதனைச் சிறப்பினமாகக் கருதி கடந்த 2010-ம் கல்வியாண்டு முதல் பி.ஏ. பி.எல்., படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கு. இடம்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இப்போது அமைந்துள்ள இடம் போதுமானதாக இல்லை. இதற்கென சென்னை அருகே பெருங்குடியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட பல்கலைக்கழக வளாகக் கட்டடம் ரூ.59.27 கோடியில் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதிக் கட்டடம் ரூ.1.72 கோடியில் கட்டப்படும். வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் ஏற்படுத்தித் தரும் வகையில், ரூ.7.56 கோடி நிதி ஒதுக்கப்படும். மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இப்போதுள்ள விடுதியில் சுமார் 38 மாணவர்கள் மட்டுமே தங்க முடியும். எனவே, கூடுதலாக 50 மாணவர்கள் தங்குவதற்கு வசதியான ஒரு புதிய விடுதி ரூ.1.21 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.