உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு அளிக்கப்பட்ட விடுமுறையையும் ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏ.சி வசதி இல்லாததால் கோடை விடுமுறை விடபப்ட்டது ஆனால் தற்போது குளுகுளு அறைகளில் தான் விசாரணை நடைபெறுகிறது. சென்னை, மதுரையில் 5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்நலையில் கோடை விடுமுறையால் வழக்கு விசாரணைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.