10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் "மிஸ்சிங்': மாணவர்கள் ஏமாற்றம்

திண்டுக்கல், நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளிக்கு, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பண்டல், நேற்று வராததால், மாணவர்கள்
ஏமாற்றம் அடைந்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 31ல் வெளியானது. மாநிலம் முழுவதும் மதிப்பெண் பட்டியல், நேற்று வழங்கப்பட்டது. நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளிக்கு, கல்வி அலுவலகத்திலிருந்து, மதிப்பெண் பட்டியல் பண்டல் வரவில்லை. இதனால், மதிப்பெண் பெற வந்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். "மதிப்பெண் பட்டியல், தவறுதலாக மற்றொரு பள்ளியின் மதிப்பெண் பண்டலுடன் சேர்த்து அனுப்பபட்டு உள்ளதாகவும், அங்கிருந்து வரவழைக்கப்பட்டு இன்று வழங்கப்படும்' என, பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் தெரிவித்தது. பழநி, கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி கூறுகையில், ""கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து வந்த பேக்கிங்கில், குருவப்பா பள்ளியின் மதிப்பெண் பட்டியல் பண்டல் இல்லை. டேட்டா சென்டரிலிருந்து அனுப்பும் போது, விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. அங்கிருந்து வரவழைக்கபட்டு, இன்று மாணவர்களுக்கு தரப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...