பிளஸ் 2 உடனடி தேர்வு துவங்கியது

மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும்
துவங்கியது. பொதுத்தேர்வில், 95,388 பேர், தோல்வி அடைந்தனர். இவர்கள், இந்த கல்வி ஆண்டிலேயே, உடனடித்தேர்வை எழுதி, உயர் கல்வியில் சேரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், நேற்று, தேர்வு துவங்கியது. நேற்று, மொழித்தாள் தேர்வு நடந்தது. ஜூலை, 1ம் தேதி வரை, தொடர்ந்து தேர்வுகள் நடக்கின்றன. இதன் முடிவுகள், ஜூலை, 20ம் தேதிக்குள் வெளியாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...