மொபைல் "ரோமிங்' கட்டணம் நீக்கப்படவில்லை: ஜூலை 1ம் தேதி முதல் குறைக்க மட்டுமே முடிவு


"மொபைல் போனுக்கான தேசிய ரோமிங் கட்டணங்கள், ஜூலை 1ம் தேதியிலிருந்து குறைக்கப்படுகிறது; இப்போது உள்ள சூழ்நிலையில், "ரோமிங்' கட்டணத்தை முற்றிலும் நீக்குவது சிரமமானதாக இருக்கும்'
என, "டிராய்' அறிவித்துள்ளது.

சரண்டர் அதிகரிப்பு : மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண தொலைபேசி என்று அழைக்கப்பட்ட, "லேண்ட்லைன்' இணைப்புகளை சரண்டர் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் போன்களை பொருத்தமட்டில், ஒரு வட்டத்திற்குள் இருந்து மற்றொரு வட்டத்திற்கு செல்லும் போது, ரோமிங் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது.
இதில், உள்வரும் அழைப்புகளுக்கும், வெளி செல்லும் அழைப்புகளுக்கும் ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில், மொத்தம், 22 தொலைதொடர்பு வட்டங்கள் உள்ளன.
ரோமிங் கட்டணங்களை முற்றிலும் ஒழித்தால், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர், கபில்சிபல், ரோமிங் கட்டணங்கள் விரைவில் முற்றிலும் நீக்கப்படும் என கூறியிருந்தார். தொலைதொடர்பு சேவையை நடத்தும், தனியார் நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்தியா முழுவதும் பல்வேறு வட்டங்களில், சேவையை நடத்துவதற்கு வெவ்வேறு நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதால், ரோமிங் கட்டணத்தை முற்றிலும் நீக்குவது இயலாத காரியம் என குறிப்பிட்டு இருந்தன. "முற்றிலும் கட்டணத்தை நீக்குவது முடியாது; இதனால் ஏற்படும் இழப்பை தொலைதொடர்பு கம்பெனிகளால் ஈடுகட்ட முடியாது' என "டிராய்' என்ற மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் வெளிப்படையாக கூறியிருந்தது.

அனுமதி : இருப்பினும், ரோமிங்கில் இருக்கும் போது, அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்., ஆகியவற்றிற்கான கட்டணங்களை கணிசமாக குறைத்து, டிராய் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கட்டண குறைப்பை, ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் - புதுச்சேரி ஒரே தொலைதொடர்பு வட்டமாக கருதப்படுகிறது. தமிழகத்தை தாண்டி, திருப்பதிக்கோ, பெங்களூருக்கோ, திருவனந்தபுரத்திற்கோ சென்றால்,
ரோமிங் துவங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராய் அனுமதித்துள்ள கட்டண குறைப்பு விவரம் வருமாறு:

ஒரு வட்டத்திலிருந்து, மற்றொரு வட்டத்திற்கு செல்லும் போது, தேசிய ரோமிங் துவங்கிவிடும். வெளி செல்லும்
உள்ளூர் அழைப்புக்கு, தற்போது, நிமிடத்திற்கு, 1.40 ரூபாய் ரோமிங் கட்டணமாக உள்ளது. இது, 1 ரூபாயாக குறைக்கப்படுகிறது.
தேசிய ரோமிங்கில் இருக்கும்போது, வெளி செல்லும் எஸ்.டி.டி., அழைப்புக்கு, தற்போது, ஒரு நிமிடத்திற்கு, 2.40 ரூபாய் உள்ள கட்டணம், 1.50 ரூபாயாகிறது.
ரோமிங்கில் இருக்கும் போது, உள்வரும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு, 1.75 ரூபாயாக உள்ள கட்டணம், 75 காசுகளாகிறது.
ரோமிங்கில் இருக்கும் போது, வெளிசெல்லும் குறுந்தகவல்களுக்கு உள்ளூர், எஸ்.டி.டி., என பிரிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் எஸ்.எம்.எஸ்.,க்கு 1 ரூபாயாகவும், எஸ்.டி. டி.,க்கு,1.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரோமிங்கில் இருக்கும்போது, உள்வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் கிடையாது. அது இப்போதும் தொடரும்.

சிறப்பு திட்டம் : ரோமிங் சந்தாதாரர்களுக்கு, முற்றிலும் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்தோ அல்லது குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயித்தோ சிறப்பு திட்டங்களை கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்ததும், மொபைல் போன் சந்தாதாரர் அனைவருக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, டிராயின் கட்டண குறைப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...