அப்பளத்துக்கு மாவு பிசைந்த கைகளில் இனி ஸ்டெதஸ்கோப்!

அப்பளம் தயாரித்தபடியே பிளஸ்2 மற்றும் மருத்துவ நுழைவுதேர்வுகள் எழுதிய மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர், அகில இந்திய
மருத்துவ கல்விநுழைவுதேர்வில் 320வது ரேங்க் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளாசேரியை சேர்ந்த ஜோஷி-ராதா தம்பதியரின் மகன் ஜிபின், 17. தந்தையுடன் அப்பளதயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டே அரசுபள்ளியில் பிளஸ்2படிப்பை முடித்தார் ஜிபின். பிளஸ்2வில் தேர்ச்சி பெற்றவுடன் அகில இந்திய மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதினார். தேர்வுமுடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில்331வது ரேங்க் கிடைத்தது. கேரள மருத்துவநுழைவுத்தேர்விலும் 331வது ரேங்க் பெற்றுள்ளார் இவர்.

இதுகுறித்து ஜிபின் கூறுகையில்,"" டில்லியில் உள்ள ஆல் இந்தியா இ ன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அல்லது கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவபடிப்பு படிக்க விரும்புகிறேன். பிளஸ்2 தே ர்வு, மருத்துவ நுழைவுத்தேர்வுகள் நடக்கும்போதும், பெற்றோருடன் அப்பளத்தயாரிப்பில் உதவியாக இருந்தேன். மீதமுள்ள நேரத்தில் படித்தேன். நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பும் வெற்றி பெற உதவியது,'' என்றார்.

இவரது தந்தை ஜோஷி கூறுகையில்,""எனதுசகோதரர்கள் ஷாஜி, ஜோதிஷ் ஆகிய இருவரும் ஜிபினுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்தனர். ஆசிரியர்களாக இருந்தபோதும், இவர்களும் விடுமுறை நாட்களில் அப்பளம் தயாரிக்க உதவுவதுண்டு. அப்பளம் தயாரித்தபடியே படித்து ஜிபின் பெற்ற ரேங்க், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...