மாணவ, மாணவியருக்கு கட்டாய "சினிமா'

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், "இனிமே நாங்க தான்' எனும் சினிமாவை திரையிட்டு காட்ட வேண்டும் எனவும், அதற்காக, 10 ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், சினிமா திரையிடுவதில் ஏற்பட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இனிமே நாங்கதான்' என்ற சினிமாவை, பள்ளி மாணவ, மாணவியர் பார்த்து பயன்பெறும் வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில், ஜூன், 15ம் தேதியிலிருந்து, 2014 மார்ச், 31ம் தேதி வரை, காலை 9.30 மணி காட்சியாக திரையிடவும், தியேட்டர் இல்லாத ஊர்களில், பள்ளி வளாகத்தில், சிறு புராஜக்டர் மூலம் திரையிட வேண்டும். இதற்கு கட்டணமாக, பள்ளி மாணவர்களிடம், 10 ரூபாய் வசூலித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.
சினிமா திரையிடும் தியேட்டர், ஊர், தேதி ஆகியவைகளை தெரிந்து கொண்டு, பட அமைப்பாளர் குணசேகரனிடம், வசூலித்த தொகையை ஒப்படைக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களிடமும் கட்டாய வசூல் நடத்த வகை செய்யும் இந்த உத்தரவு, ஆசிரியர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
மீடியா வளராத காலத்தில், மாணவர்களுக்காக, சினிமா திரையிடும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்று அனைத்து வீடுகளிலும், கம்ப்யூட்டர் போன்றவை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், விழிப்புணர்வு சினிமா திரையிடுவதாகவும், அதற்காக, குழந்தைகளை அழைத்து செல்லவும், அவர்களிடம் இருந்து, 10 ரூபாய் வசூலிக்கவும் உத்தரவிடுகின்றனர்.
பட அமைப்பாளர், பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கு, ஏற்ப டிக்கெட்டுகளை கொடுத்து விடுகின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதில்லை. இதனால், ஆசிரியர்கள் கட்டாயமாக அவர்களிடம் வசூல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
அனைவரையும் பள்ளியிலிருந்து, தியேட்டருக்கு அழைத்து சென்று, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது மிகுந்த சிரமத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமின்றி, 1,000 மாணவர்களை ஒட்டுமொத்தமாக பள்ளியிலிருந்து தியேட்டருக்கு அழைத்து செல்லும் போது, வரும் பிரச்னைகள், போக்குவரத்து வசதி, அதற்கான செலவு, அவர்களின் பாதுகாப்பு, என பல்வேறு பிரச்னைகள் உள்ளன.கடந்த ஆண்டு, பள்ளிகளில் சிறு புராஜக்டர் மூலம் திரையிடுவதாக கூறி, பணம் வசூலித்துக்கொண்டு, "சிடி'யில் பதிவு செய்து கொடுத்து விட்டனர். "டிவி'யில் திரையிட, 10 ரூபாய் வசூலித்ததே பெரும் பிரச்னையாக வெடித்தது. அப்படியிருக்கும் போது, நடப்பாண்டும், அதே போல் உத்தரவிட்டிருப்பதில் மாணவர்களின் நலனை விட, பலரின் சுய நலம் தெரிகிறது. இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...