நர்சரி பள்ளிகளுக்கும் அரசு அங்கீகாரம் கட்டாயம்

காளான்கள் போல பரவுவதை கட்டுப்படுத்த நர்சரி பள்ளிகளும் கட்டாயம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஆச்சாரியா கல்வி

அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெ.அரவிந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எங்கள் அறக்கட்டளை மூலம் கோவை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3 பிளே பள்ளிகள் என்ற மழலையர் பள்ளிகளை நடத்தி வருகிறோம். இதற்காக தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, தாசில்தார் சான்றிதழ், தர சான்றிதழ் பெற்றுள்ளோம். இது ஆரம்ப பள்ளி இல்லை. எனவே இதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரைதான் ஆரம்ப பள்ளிகள் என்று உள்ளது. இதற்குதான் அங்கீகாரம் பெற வேண்டும் என்று

தெளிவாக கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த 10ம் தேதி எங்கள் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை, அதனால் சீல் வைக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் திடீரென்று ஒரு அறிவிப்பை பள்ளி சுவரில் ஒட்டிவிட்டனர். இது சட்டவிரோதமானது. பள்ளியை மூட அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திடீரென்று பள்ளிகளை மூடியதால் மாணவர்கள், பெற்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எந்தவிதமான அவகாசமும் தரவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி சசிதரன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் சார்பாக மூத்த வக்கீல் கே.துரைசாமியும்,  அரசு சார்பாக சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மனுதாரர் நடத்தும் 3 மழலை பள்ளிக்கு அங்கீகாரம் பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இதை மாவட்ட கல்வி அதிகாரி பரிசீலனை செய்தார் . அதன்பிறகு பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளார். மழலை பள்ளிக்கு மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி அங்கீகாரம் பெற வேண்டும் என்று கூறப்படவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி பள்ளி என்றால் மழலை பள்ளிகள், நர்சரி, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகியவை பள்ளிகள்தான். எனவே மழலை பள்ளிகள் தமிழ்நாடு சட்டத்தின் கீழ் வராது என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே தமிழ்நாடு சட்டத்தின்படி மழலை பள்ளிகள் கட்டாயம் அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் காளான்கள் போல பரவி  வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து பள்ளிகளும் சட்டப்படி அங்கீகாரம் பெற வேண்டும். கட்டுப்பாடு இல்லாவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நர்சரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் உயர்பள்ளிக்கு செல்கிறார்கள். எனவே நர்சரி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர விபத்து போல பல்வேறு துரதிருஷ்டமான சம்பவங்கள் தமிழக பள்ளிகளில் நடந்து வருவதை நாம் சந்தித்துள்ளோம். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்.

இதுதான் தகுந்த நேரம். இதற்காகதான் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே மனுதாரர் நடத்தும் 3 பள்ளிகளும் அங்கீகாரம் கேட்டு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த ஆவணங்களையும் பள்ளி நிர்வாகம் கல்வி அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு கல்வி அதிகாரி பள்ளியை ஆய்வு செய்து மனுதாரர் மனு மீது ஒரு மாதத்திற்குள் முடிவு அறிவிக்க வேண்டும்.  இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...