புதிய தொழில்நுட்பத்தில் கற்பித்தல்

சர்வதேச மாநாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புதிய தொழில்நுட்பத்தில் கற்பித்தல்

பி.எட். படிக்கும் மாணவர்கள் தான் வருங்கால ஆசிரியர்கள். அவர்கள் நன்றாக படித்தால் தான் மாணவர்களுக்கு நன்றாக கற்பிக்கமுடியும். தற்போது லேப்டாப், கம்ப்யூட்டர், இணையதளம், செல்போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த பல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது.எனவே தமிழக அரசின் குறிக்கோளான உயர் கல்வியில் உலகத்தரத்திற்கு இணையாக வரவேண்டும் என்பதற்கு ஏற்ப, உலகத்தரத்தில் பி.எட். கல்வியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி போதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் விரும்புகிறது. அதற்காக சர்வதேச அளவில் 3 மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சென்னை புரசைவாக்கம் ஈவார்ட்ஸ் பள்ளியில் நடைபெற உள்ளது. மாநாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைக்கிறார்.

600 ஆசிரியர்கள் பங்கேற்கிறார்கள்

இந்த மாநாட்டில் பி.எட். கல்லூரியின் ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 600 பேர் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் 300 பேர் தமிழ்நாட்டில் இருந்து பங்ககேற்கிறார்கள். மீதம் உள்ள 300 பேர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, ஈரான், துபாய், ஈராக் முதலிய வெளிநாடுகளில் இருந்தும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.எப்படிப்பட்ட முறையில் பி.எட். மாணவர்களுக்கு கல்வியை புகட்டலாம். எத்தகைய பாடத்திட்டம் வைக்கலாம் என்பது குறித்து விரிவாக பேசப்படுகிறது. ஆராய்ச்சி கட்டுரைகளும் சமர்பிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் அரசு பி.எட். கல்லூரிகள், உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்பட மொத்தம் 674 பி.எட்.கல்லூரிகள் உள்ளன.

3 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து

மதுரையில் ஒரு பி.எட்.கல்லூரியிலும், வேதாரண்யத்தில் ஒரு பி.எட்.கல்லூரியிலும் நிரந்தர கட்டிடம் இல்லை. சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கட்டமைப்பு வசதி சரி இல்லை எனவே அந்த 3 கல்லூரிகளின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பை ரத்து செய்துள்ளோம். மேலும் தேசிய ஆசிரியர் கவுன்சிலின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படியும் சிபாரிசு செய்து கடிதம் எழுதி உள்ளோம். இந்த 3 கல்லூரிகளில் இந்த வருடம் மாணவர்களை சேர்க்கமுடியாது.

பாடத்திட்டம் மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் பி.எட்.கல்லூரிகளின் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதன்படி 24 தலைப்புகளில் பாடப்புத்தகத்திற்கான சாராம்சம் தயாராக உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும் என்பது பற்றியும் முடிவு செய்துள்ளோம்.இருப்பினும் இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கும் ஆலோசனையை ஏற்று பாடத்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.அரசின் இறுதி முடிவு பெற்று பாடபுத்தகங்கள் தயாரிக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டில் (2013–2014) அமல்படுத்தப்படும்.இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். பேட்டியின்போது பதிவாளர் டி.விஸ்வலிங்கம் உடன் இருந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...