தொலை நிலைக் கல்வி மையங்களுக்கு சிக்கல் : பல்கலை மானியக்குழு புது உத்தரவு

"அரசு சார்புள்ள மற்றும் தனியார் பல்கலைகள், தொலை நிலைக் கல்வி படிப்பு மையங்களை, படிப்பு எல்லை அல்லது மாநிலத்திற்குள் மட்டுமே நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு
உள்ளது.பல்கலைகள் நடத்தும் தொலை நிலைக்கல்வி நேரடி படிப்பு மையங்கள், தனியார் படிப்பு மையங்களை மேம்படுத்தவும், தரத்தை கண்காணிக்கவும், "டெக்' எனப்படும் "தொலை நிலைக் கல்வி குழுமம்' ஏற்படுத்தப்பட்டது. படிப்புகளின் தரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தொலை நிலைக்கல்வி படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியது. தற்போது, "தொலை நிலைக் கல்வி குழுமம் கலைக்கப்பட்டு, அதன் பணிகள், பல்கலை மானியக்குழுவால் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியார், நிகர்நிலை பல்கலை கழகங்களில், படிப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டு, பட்டங்கள் தனியார் மையங்கள் மூலம், சுலபமாக வழங்கப்பட்டதை அறிந்து, பல்கலை மானியக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், தனியார் பல்கலைகள், நாட்டின் பல இடங்களில், தனியார் படிப்பு மையங்களை நிறுவி, மாணவர்களுக்கு புத்தகங்களையும், பாடத்திட்டங்களையும் வழங்கிவிட்டு, எந்த ஒரு வகுப்பையும் நடத்தாமல், தாங்களே தேர்வையும் நடத்தி, மிக எளிதாக பட்டங்கள் வழங்குவதை கண்டறிந்தது. இதை தவிர்க்க, தொலை நிலைக்கல்வி குழுமத்தின் கீழ் இருந்த படிப்புகளை கண்காணிக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும், சில வழிமுறைகளை வகுத்து, பல்கலை கழக மானியக்குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், "அரசு சார்புள்ள பல்கலைகள், தொலைநிலைக் கல்வி படிப்பு மையங்களை, சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, படிப்பு எல்லை அல்லது மாநிலத்திற்குள் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகள், எந்த ஒரு கல்லூரியையோ, நிறுவனத்தையோ, தன்னுடைய படிப்புகளை நடத்துவதற்கான மையமாக அங்கீகரிக்கக்கூடாது. எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலைக் கல்வி மூலம் எந்த பல்கலையும் நடத்தக் கூடாது' என, கூறியுள்ளது. இந்த அறிவிப்பால், பல்கலைகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அரசு சார்புள்ள பல்கலைகளின் முழு செலவையும், மாநில அரசு ஏற்பதில்லை. அதனால் ஏற்படும் பற்றாக்குறையை, தொலை நிலைக்கல்வி மையங்களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, சரிக்கட்டி வருகின்றன. இதற்காக, மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தொலைநிலைக் கல்வி படிப்பு மையங்களை ஏற்படுத்தி உள்ளன. மானியக்குழுவின் அறிவிப்பால், பல்கலைகள் அதிர்ச்சியில் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...