"பள்ளி மாணவர்கள் ரூ.10 கட்டணம் செலுத்தி திரைப்படம் பார்க்க
வேண்டும்,' என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள்
தொடர்பு துறை இயக்குனர் சார்பில் மாவட்ட கல்வி
அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் கல்வி திரைப்பட அறக்கட்டளை சார்பில், திரைப்படம் காண்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில், "இனிமே நாங்க தான்' என்ற திரைப்படமும், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் "பசங்க' என்ற திரைப்படத்தையும் 15.7.2013 முதல் 31.3.2014 வரை மாணவர்களுக்கு காண்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படங்களை பார்க்க, மாணவர்களிடம் தலா ரூ.10 கட்டணம் வசூலித்து, அத்தொகையை குழந்தைகள் கல்வி அறக்கட்டளையிடம் தலைமை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். மார்ச் 2014க்குள் ஏதாவது ஒரு நாளில் பள்ளிக்கு அருகே உள்ள திரையரங்குகளுக்கு சென்று, வகுப்புக்கள் வாரியாக இந்த திரைப்படங்களை மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: திரைப்படம் பார்ப்பதற்காக மாணவர்களிடம் ரூ.10 கட்டாயம் வசூலிக்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இத்தொகையை வசூலிப்பது கடினம். பெற்றோருக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது. மேலும் தற்போது, மாணவர்களை மொத்தமாக தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவது என்பது அதிக சிரமம். பாதுகாப்பு குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் முழு பொறுப்பும் ஆசிரியர்கள் தலையில் மட்டுமே விழுகிறது, என்றனர்.

ஆசிரியர்கள் அதிருப்தி: