மேலும் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு தடை

டி.டி., மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தொடர்ந்து, மேலும், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி மறுத்துள்ளது.
புதிதாக துவங்கப்பட்டுள்ள, மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் சேர்த்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், திருவள்ளூர் மாவட்டம், குன்னவலம் கிராமத்தில் இயங்கி வந்த, டி.டி., மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், 2013 - 14ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., கடந்த மாதம் தடை விதித்தது. இவற்றை தொடர்ந்து, தற்போது, திருச்சி, சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை, தண்டலம், மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை, தாகூர் மருத்துவக் கல்லூரி ஆகிய, மூன்று கல்லூரிகளில், போதிய உள்கட்டமைப்பு வசதி மற்றும் பேராசிரியர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ., அனுமதி மறுத்துள்ளது. அதேசமயம், மதுரையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், சிறுபான்மை அந்தஸ்து இல்லாத கல்லூரிகள், தங்கள் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களில், 65 சதவீதமும், சிறுபான்மை அந்தஸ்து உள்ள கல்லூரிகள், 50 சதவீத எம்.பி.பி.எஸ்., இடங்களையும், ஆண்டுதோறும் அரசுக்கு தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...