செப்., 22ல் ஊரக திறனாய்வு தேர்வு: "ஆன் லைன்'ல் விண்ணப்பம்

கிராமப்புற மாணவர்களுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 22 ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, "ஆன் லைன்' ல், பெறலாம். இத்தேர்வுக்கு, 8ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று, ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு, 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு விண்ணப்பங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. "இந்த ஆண்டு முதல், www.peps.tn.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பத்துடன், வருவாய் சான்று இணைத்து, ஆக., 2 க்குள், முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தேர்வு மற்றும் சேவைக்கட்டணமாக தலா 5 ரூபாய் என, 10 ரூபாயை தலைமை ஆசிரியர் மூலம், முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும். "பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், "ஆன் லைன்' மூலம், தேர்வுத்துறை பெற்றுக் கொண்டால், மாணவர்களுக்கு எளிதாக இருக்கும், என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...