குரூப் 4 போட்டி தேர்வுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்,சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.

வார நாட்களில் பிற்பகல், 2 மணி முதல், மாலை, 6 மணி வரையும், வார விடுமுறை நாட்களில் காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரையும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளை தேர்ந்த ஆசிரியர்களை கொண்டு, மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வப் பயிலும் வட்டத்தில் உள்ள போட்டி தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...