"தொழிலாளர் சட்டங்கள் குறித்து ஓராண்டு பட்டயப் படிப்பு" தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் என்ற ஓராண்டு பகுதி நேர பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஏதாவதொரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பட்டயப் படிப்பில் சேரலாம். இதற்கான வகுப்புகள் சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும்.

இந்த பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 22.

மேலும் விவரங்களுக்கு:
இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், 5, காமராஜர் சாலை, சென்னை -5 (சென்னை கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகில்)

044-28440102 மற்றும் 28445778 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பத்தின் விலை ரூ.200.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு100 (ஜாதிச் சான்றிதழின் நகலை அளிக்க வேண்டும்).

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...