அரசு மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: 960 ஆக உயர வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகள், தங்கள், எம்.பி.பி.எஸ்., இடங்களில், 50 இடங்களை அதிகரித்து கொள்ளலாம் என்ற, மத்திய அரசின் அறிவிப்பையடுத்து, இரண்டாம்கட்ட கலந்தாய்விற்கான, அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., இடங்கள், 960 ஆக உயர
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல் இயங்க உள்ள, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ.சி., மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் சேர்த்து, அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், தற்போது மொத்தம், 2,615 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்நிலையில், "10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், தற்போதுள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களில், 50 இடங்களை அதிகரித்து கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சிவகங்கை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் கே.கே.நகர்., இ.எஸ்.ஐ.சி., மருத்துவக் கல்லூரி, ஆகிய, எட்டு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடையாததால், இவற்றில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், அதிகபட்சமாக தலா, 250 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளதால், இக்கல்லூரிகளிலும், மேற்கொண்டு இடங்களை உயர்த்த முடியாது. குறிப்பிட்ட, 10 கல்லூரிகளை தவிர, மீதியுள்ள, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா, 50 இடங்கள் என, மொத்தம், 550 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த கூடுதல் இடங்கள், ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கப்படும் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்பட்டால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள், 410ல் இருந்து 960 ஆக உயர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., இடங்களை உயர்த்துவது தொடர்பாக, இம்மாதம், 24ம் தேதிக்குள், விண்ணப்பங்கள் சமர்பிக்க, கல்லூரி நிர்வாகங்களை கேட்டுள்ளோம். விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு, இம்மாதம், 31ம் தேதிக்குள், மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் எனவும், உயர்த்தப்படும் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வு, பின்னர் நடைபெறும் எனவும், தெரிகிறது. குறித்த நேரத்தில், இடங்களை அதிகரிக்க அனுமதி கிடைத்தால், இந்த இடங்களும், இரண்டாம்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...