அரசு உத்தரவை மீறி இலவச லேப் - டாப் பட்டுவாடா: திரும்ப பெற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்- டாப் தரப்படுகிறது. சுயநிதி பிரிவில் படிக்கும், மாணவர்களுக்கு இலவச லேப்- டாப் கிடையாது என அரசு
உத்தரவிட்டுள்ளது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில், சுயநிதிபிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் லேப்- டாப் தரப்பட்டு வருகின்றன.

முற்றுகை:

திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்- டாப் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் விஸ்வநாதன் காரை, சுய நிதி பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டனர். பிற பள்ளிகளில் வழங்கியதை போல் தங்களுக்கும் இலவச லேப்-டாப் தர வேண்டும் என்றனர். இதையடுத்து, மாவட்டத்தில் எந்தந்த பள்ளிகளில், சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது என கல்வித்துறையினர் பட்டியல் தயாரிக்கின்றனர்.

உத்தரவு:

சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப்களை மீண்டும் பெற்று, முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு வழங்காத தலைமை ஆசிரியர்கள், லேப்-டாப்பிற்குரிய பணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என கல்வி அதிகாரிகளால் வாய்மொழி உத்தரவு தரப்பட்டுள்ளது. இதையடுத்து, சுயநிதிபிரிவு மாணவர்களிடம் லேப்-டாப்பை மீண்டும் பெறும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காரணம் யார்:

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,""ஒவ்வொரு ஆண்டும் அரசு உதவி பெறும் பிரிவில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை, சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை விபரத்தை தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கிறார். ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை லேப்-டாப் தேவை என்ற பட்டியல், அவர்களால் அரசிற்கு தரப்படுகிறது. அவர்கள் தரும் லேப்-டாப்களை தான் நாங்கள் மாணவர்களுக்கு தந்தோம். மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்த தவறால், எங்களை பணம் கட்ட கூறுவது எப்படி நியாயம்,என்றார்.

அதிருப்தி:

லேப்-டாப் வழங்கி பல நாட்கள் கழித்து தற்போது மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கூறுவதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுகுமார் தேவதாஸ் கூறுகையில்,""சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் கிடையாது. காந்திகிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைபள்ளி, சுயநிதி மாணவர்களுக்கு தவறுதலாக இலவச லேப் டாப்கள் வழங்கப்பட்டிருந்தன. இவை திரும்ப பெறப்பட்டுள்ளது,'' என்றார்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...