தந்தை இறந்த சோகத்திலும், மாணவன் ஒருவர் ஆசிரியர் பட்டயப்படிப்பு தேர்வு
எழுதினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கம்மாபட்டியைச்
சேர்ந்தவர் சேதுமாதவன். இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி
கல்லூரியில், ஆசிரியர் பட்டயப்படிப்பு 2ம்
ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக 2ம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. நேற்று, கடைசி தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. சேதுமாதவன் தந்தை வெள்ளைச்சாமி (68). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இறந்துவிட்டார். அவருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. மூத்த மகனான சேதுமாதவன் தேர்வுக்கு செல்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். பின்பு சோகத்தை தாங்கிக்கொண்டு தேர்வு எழுத முடிவு செய்தார். தேர்வு மையமான கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, சமூக அறிவியல் தேர்வை எழுதினார். அவருக்கு சக மாணவர்கள் ஆறுதல் கூறினர். தேர்வு முடிந்த பிறகு சேதுமாதவன் கம்மாபட்டி சென்று, தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு காரியங்கள் செய்தார்.