அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி

அரசு தொழிற்பயிற்சி மையத்தில், புத்தகம் தைக்கும் பயிற்சி பெற விரும்பும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சென்னை, பூந்தமல்லியில், பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கான, அரசு தொழிற்பயிற்சி மையம் உள்ளது. இது மாற்றுத் திறனாளிகள், மாநில ஆணையரகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு, தொழிற் பயிற்சிப் பிரிவில், விடுதி, உணவு, பயிற்சிக்கு தேவையான உபகரணங்களுடன் கூடிய வசதியுடன், ஓராண்டு பயிற்சி அளிப்பதற்காக, பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து (இரு பாலார்), விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்போர், ஜூலை 1 ல், 14 வயது முடிந்தவராகவும், 40 வயதிற்குட்பட்டவராகவும், 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, சென்னை, கே.கே.நகர், ஜவகர்லால் நேரு உள்வட்ட சாலையில் உள்ள, மாற்றுத் திறனாளிகள், மாநில ஆணையரகம் அல்லது பூந்தமல்லியில் செயல்படும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு தொழிற்பயிற்சி மையம் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...