"தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார திட்டங்களில் பயன்பெற
விரும்புவோர், இன்று முதல் துவங்கி, ஆக., 8 வரை, ஆன்-லைனில்
விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ - தமிழ்நாடு ஆதி
திராவிடர் ஹவுசிங் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், அறிவித்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தாட்கோ மூலம், பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் திட்டம், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட, பல திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புபவர், http://application.tahdco.com என்ற இணைய தள முகவரிக்கு சென்று, விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது, குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிட சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி, விண்ணப்பிக்க விரும்பும் திட்டம் மற்றும் திட்ட அறிக்கை குறிப்புகளை, அவசியம் பதிவு செய்ய வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும். இன்று முதல், ஆக., 8 வரை, ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.