பள்ளிக்கல்வி இயக்குனராக வி.சி.ராமேஸ்வர முருகன் நியமனம்


பள்ளிக்கல்வித்துறையில் 7 இயக்குனர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வி இயக்குனராக வி.சி.ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 2 இணை இயக்குனர்கள்
இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.வி.சி.ராமேஸ்வர முருகன்பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பல்வேறு இயக்குனரகங்கள் இயங்குகின்றன.பள்ளி கல்வி இயக்குனராக வி.சி.ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றினார். பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இளம் வயதில் (43 வயதில்) பள்ளிக்கல்வி இயக்குனராக பதவி ஏற்கும் முதல் அதிகாரி இவர்தான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்க கல்வி இயக்குனராக இளங்கோவன் பதவி ஏற்க உள்ளார். அரசு தேர்வுகள் இயக்குனராக கு.தேவராஜன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக தண்.வசுந்தரா தேவியும் (இயக்குனர் அந்தஸ்து) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக ஆர்.பிச்சையும், தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளராக அன்பழகனும், ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனராக சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 பேர்களுக்கு பதவி உயர்வுஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனராக கண்ணப்பன் பதவி ஏற்கிறார். இவர் இதுவரை பள்ளிக்கல்வி இணை இயக்குனராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று இயக்குனராகிறார். அதுபோல தங்கமாரி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக(இயக்குனர் அந்தஸ்து) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை இணை இயக்குனராக அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் பணியாற்றினார். இப்போது பதவி உயர்வு பெற்று செல்கிறார்.பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பொது), அரசு தேர்வுகள் இணை இயக்குனர் ஆகிய பதவிகள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...