பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை கண்காணிக்க குழு


தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கையை கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது மூத்த கல்வியாளர்
தலைமையில் இந்த குழு அமைக்கப்படும்.பி.எட். படிப்புதமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600-க்கும் மேல் தனியார் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 3,100 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் சுமார் 60 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன.பி.எட். படிப்பில் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், சிறுபான்மை அல்லாத உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ஆனால், தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் அனைத்து பி.எட். இடங்களும் கல்லூரி நிர்வாகத்தினராலேயே நிரப்பப்படுகின்றன.தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைதனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுப்பதற்காக நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரையின்படி ரூ.47,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க நடைமுறைகள் இருப்பதைப் போல் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் மீது புகார் செய்யவோ, நடவடிக்கை எடுப்பதற்கோ எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான பணி தொடங்கப்படாத நிலையில், கிட்டதட்ட அனைத்து தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் சீட்டுகள் நிரப்பப்பட்டுவிட்டன.கண்காணிக்க குழு நியமனம்இந்த நிலையில், மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தனியார் தொழில்கல்வி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தப்படுவதைப் போன்று தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அல்லது மூத்த கல்வியாளர் ஒருவர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம், தனியார் பி.எட். கல்லூரிகளில் விருப்பம் போல் மாணவர்களை சேர்ப்பதும் பி.எட். படிக்க தகுதி இல்லாத பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பில் மாணவர்களை அட்மிஷன் செய்வதும் கட்டுப்படுத்தப்படும்.போலியாக வருகைப்பதிவு எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரிக்குச் செல்லாமலே போலியாக வருகைப்பதிவு வழங்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தனியார் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த கண்காணிப்பு குழு அமைப்பதை போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார் செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...