பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கென பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சில வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இன்றி மாணவ, மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இலவச பஸ்
பாஸ் என்பதால் பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் சில ஓட்டுநர்கள் பஸ் நிறுத்தத்திற்கு முன்பே அல்லது சற்று தள்ளியே பேருந்துகளை நிறுத்துவதால் மாணவ, மாணவியர்கள் பேருந்துகளில் ஏற முடியவில்லை. மேலும் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமுல்படுத்தப்படுவதால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்துக்கழக மேலாளர், காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்கள் கொண்டு வட்டார அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பள்ளி நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...