செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்கின்றனரா? அங்கு மனிதர்கள் வாழ ஏற்ற
சூழ்நிலை நிலவுகிறதா என்பதை ஆராய, வரும் அக்டோபர் - நவம்பர் மாதங் களில்,
"இஸ்ரோ' செயற்கைக்கோளை விண்ணில்
ஏவுகிறது.
ஏவுகிறது.
பூமியில்
இருந்து, பல ஆயிரம் கோடி கி.மீ., தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில்
மனிதர்கள் வாழ முடியுமா என்பதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள, "இஸ்ரோ'
இதற்காக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகிறது.
"மார்ஸ்
ஆர்பிட்டர் மிஷன்' என்ற பெயரிலான அந்த செயற்கைக்கோள், "பி.எஸ்.எல்.வி., -
எக்ஸ்.எல்.,' என்ற ராக்கெட்டில் ஏற்றிச் செல்லப்படுகிறது.ஸ்ரீஹரிகோட்டா
விண்வெளி ஏவுதளத்திலிருந்து, இந்த ஆண்டு, அக்டோபர் - நவம்பர் மாதம் ஏவப்பட
உள்ள அந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், செவ்வாய்
கிரகத்தை சென்றடையும்.
குறிப்பிட்ட தூரம் வரை
அந்த செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி., - எக்ஸ்.எல்., செயற்கை க் கோள்
தாங்கிச் செல்லும்; அதற்குப் பின், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்
செயற்கைக்கோளில் உள்ள எரிபொருள் மூலம், அது, பல ஆயிரம் கி.மீ., பயணம்
செய்யும்.
பூமியில் இருந்து புறப்படும் போது,
1,350 கிலோ எடையில் இருக்கும் செயற்கைக்கோள், தன் பயணத்தின் போது, எடையைக்
குறைத்துக் கொண்டே சென்று, செவ்வாய் கிரகத்தை அடையும் போது, சில நூறு கிலோ
எடை கொண்டதாக மாறிவிடும்.அதில், ஐந்து முக்கிய கருவிகளும் இணைக்கப்பட
உள்ளன. ஆல்பா போட்டோமீட்டர், மீத்தேன் சென்சார், எக்ஸ்சோஸ்பரிக் கம்போசிசன்
எக்ஸ்புளோரர், கலர் கேமரா, டி.ஐ.ஆர்., இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகிய
கருவிகள் அதில் பொருத்தப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படும்.
செவ்வாய்
கிரக ஆராய்ச்சியுடன், தொடர்ந்து பல ஆராய்ச்சிக்காகவும், சேவைகளுக்காகவும்,
பல செயற்கைக்கோள்களை, "இஸ்ரோ' விண்வெளிக்கு ஏவ உள்ளது. இதற்கான
ஏற்பாடுகளை, அதன் தலைவர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, விஞ்ஞானிகள் மேற்கொண்டு
வருகின்றனர்.