டி.கல்லுப்பட்டி அருகே மாணவர்களே இல்லாத நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மட்டும் வந்து செல்கிறார்

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களே இல்லை. ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் வந்துவந்து செல்கிறார். அவருக்கும் இந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

நடுநிலைப்பள்ளி

கிராமப்புற மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக காமராஜர் காலத்தில் சிறிய கிராமங்களில் கூட பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அரசு பள்ளிகளில் படிப்பதை விட தனியார் பள்ளிகளில் படிப்பதையே பெற்றோரும், குழந்தைகளும் விரும்புகின்றனர். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சவலைப்பிள்ளைகளாக மாறி வருகின்றன.

பேரையூரை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது, எம்.சுப்புலாபுரம். இங்கு அரசு உதவிபெறும் இந்துநடுநிலைப்பள்ளி உள்ளது. 1958ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வந்தனர். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஏற்பட்ட மோகத்தால் இந்த பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

2012–13ம் ஆண்டில் இங்கு 8ம் வகுப்பில் 9 பேரும், 6–7 வகுப்புகளில் சேர்த்து 7 பேருமாக மொத்தம் 16 பேர் மட்டுமே படித்தனர். இங்கிருந்த தலைமை ஆசிரியரும் கடந்த ஆண்டு பணிநிறைவு பெற்றுவிட்டார். பள்ளி தொடர்ந்து நடப்பது சந்தேகம் என எண்ணிய மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்று சென்றுவிட்டனர்.

எனவே நடப்பு கல்வி ஆண்டில் இங்கு மாணவர்களே இல்லை.

ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து பள்ளியை திறந்து மாலை வரை உட்கார்ந்துவிட்டு செல்கிறார்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி என்பதால், ஒவ்வொரு மாதமும் பணியாற்றுபவர்கள் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி, அதன்பிறகு தான் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த £தம் வரை இந்த ஓராசிரியைக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த மாதம் அதுவும் வழங்கப்படவில்லை.

இந்த பள்ளியின் நிலை குறித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கடந்த மாதம் 2 முறை ஆய்வு செய்துள்ளார். நேற்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வந்து ஆய்வு செய்தார். இப்போதுள்ள நிலையில் இந்த பள்ளியில் மீண்டும் மாணவர்கள் சேர்வது சந்தேகத்திற்கிடமானதாகவே உள்ளது. ஆசிரியயை வேறு பள்ளிக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...