தமிழ்நாட்டில் ஆசிரியருக்காக ஏங்கும் பள்ளிகள்: அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் உள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை ஆர்.எம்.எஸ்.ஏ புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் தற்போது மேற்கொண்ட சர்வேயில் தமிழகத்திலுள்ள 16 பள்ளிகளில் இரு ஆசிரியர் கூட கிடையாது.

இது போன்ற பள்ளிகள் சென்னை. விழுப்புரம், வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இதைத்தவிர மாநிலத்தின் 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன.

கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.

ஆனாலும் பல வகுப்புகளில் பலவிதமான பாடங்களை நடத்த 1 அல்லது 2 ஆசிரியர்களே பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை கல்வித்துறை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர்.

இதனை அரசு அலட்சியபடுத்தியதன் காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றார்கள்.

ஆனால் இது குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும்.

ஆசிரியர் மாணவர் விகிதத்தின் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்ற விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...